வத்திராயிருப்பு சேதுநாராயணப் பெருமாள் கோயிலில் அனுமந்த வாகன எழுந்தருளல்
ADDED :3016 days ago
வத்திராயிருப்பு: சேதுநாராயணப் பெருமாள் கோயிலில் நடந்து வரும் பிரம்மோற்ஸவ விழாவின் 2 ம் நாளில் சுவாமி அனுமந்த வாகனத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. அதிகாலையில் மூலவருக்கும், உற்சவருக்கும், ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதணைகளுடன் திருமஞ்சன வழிபாடு நடந்தது. வேதவிற்பன்னர்களின் திவ்யநாம பஜனை வழிபாடு முடிந்தபின் சுவாமி அனுமந்த வாகனத்தி்ல் எழுந்தருளினார். சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வீதியுலா நடந்தது. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.