உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி கோயில்களில் அன்னாபிஷேகம்

பழநி கோயில்களில் அன்னாபிஷேகம்

பழநி: உலகநலன் வேண்டி, பழநி முருகன் கோயிலில் 108 சங்குகளில் புனிதநீர் நிரப்பி அன்னாபிஷேகம் நடந்தது. பழநி மலைக்கோயில் பாரவேல் மண்டபத்தில் 108 சங்குகளில் புனித நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தம் நிரப்பப்பட்டிருந்தது. தங்க சப்பரத்தில் கும்பகலசங்கள் வைத்து யாக பூஜை நடந்தது. உச்சி காலத்தில் மூலவருக்கு புனிதநீர் அபிஷேகம் செய்யப்பட்டு, வில்வம் கலந்த சுத்த அன்னம், மூலவருக்கு கிரீடமாக சூட்டப்பட்டது. பாதங்களில் அன்னம் படைக்கப்பட்டது. இன்று (ஜூலை 8ல்) மாலை 5:30 மணிக்கு சாயரட்சை பூஜையில், திருஆவினன்குடி கோயிலில் அன்னாபிஷேகம், அருணகிரி நாதர் விழா நடக்கிறது. ஜூலை 9ல் பெரிய நாயகியம்மன் கோயிலிலும், ஜூலை 10ல் கோதைமங்கலம் பெரியாவுடையார் கோயிலிலும் அன்னாபிஷேகம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !