சாய்பாபா கோவிலில் சத்திய நாராயண பூஜை
திருத்தணி: சாய்பாபா கோவிலில், குரு பவுர்ணமியையொட்டி, நேற்று சத்திய நாராயண பூஜை நடந்தது. கே. ஜி. கண்டிகை, சாய்நகரில் உள்ள ஷீரடி சாய்பாபா கோவிலில், நேற்று முன்தினம், குருபவுர்ணமி விழா நடந்தது. விழாவையொட்டி, அதிகாலை, 5:00 மணிக்கு சுப்ரபாரதம், 5:15க்கு காகட ஆரத்தி, காலை, 6:00 மணி முதல், காலை, 8:00 மணி வரை அபிஷேகம் மற்றும் தீர்த்த பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, காலை, 8:30 மணி முதல், மதியம், 12:00 மணி வரை கணபதி ஹோமம், ந வகிரக ஹோமம் நடந்தது. நேற்று காலை, சத்திய நாராயண பூஜையையொட்டி, கோவில் வளாகத்தில் ஒருயாகசாலை அமைத்து, கணபதி ஹோமம் மற்றும் சிறப்பு பூஜைகள், காலை, 9:30 மணி முதல், மதியம், 12:00 மணி வரைநடந்தது. மேலும், நேற்று முன்தினம் முதல், 24 மணி நேரமும் சாய்நாமா பஜனை குழுவினரின் பக்திபாடல்கள் மற்றும் பஜனையும் நடந்தது. நிகழ்ச்சியில், திருத்தணி, கே.ஜி.கண்டிகை மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.