காயநிர்மலேஸ்வரர் கோவிலில் துர்க்கை அம்மனுக்கு மஹா சண்டி யாகம்
ADDED :3011 days ago
ஆத்தூர்: துர்க்கை அம்மனுக்கு மஹா சண்டி யாக பூஜை நடந்தது. ஆத்தூர், கோட்டை காயநிர்மலேஸ்வரர் கோவிலில், பவுர்ணமியொட்டி, நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு, கோ, கஜ, அஸ்வ, சுமங்கலி, பிரம்மச்சாரி, வடுக, கன்னிகா பூஜைகளுடன், மஹா மங்கள சண்டி ஹோமங்கள் நடந்தன. இரவு, 9:00 மணிக்கு, சந்தன காப்பு, சிறப்பு அலங்காரத்தில் துர்க்கை அம்மன், பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஆத்தூர், நரசிங்கபுரம், கெங்கவல்லி சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த, ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர். அதேபோல், கோட்டை மதுரகாளியம்மன், ஆறகளூர் அம்பாயிரம்மன் கோவில்களில் பவுர்ணமி பூஜை நடந்தது.