உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குருபூர்ணிமாவை முன்னிட்டு சகஸ்ர சங்காபிஷேகம், ருத்ர ஹோமம்

குருபூர்ணிமாவை முன்னிட்டு சகஸ்ர சங்காபிஷேகம், ருத்ர ஹோமம்

ஓசூர்: தேன்கனிக்கோட்டை அடுத்த கெலமங்கலத்தில் நடந்த சகஸ்ர சங்காபி?ஷகம் மற்றும் ருத்ர ஹோமத்தில், திரளான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை தாலுகா, கெலமங்கலம் சத்ய சாயி சமுதாய மையத்தில், தமிழ்நாடு பகவான் ஸ்ரீ சத்ய சாயி சேவா நிறுவனங்கள் சார்பில், குரு பூர்ணிமா வைபவத்தை முன்னிட்டு, நேற்று சகஸ்ர சங்காபிஷேகம் மற்றும் ருத்ர ஹோமம் நடந்தது. அதிகாலை, 5:00 மணிக்கு ஓம்காரம், சுப்ரபாதம், வேதபாராயணம், நாம சங்கீர்த்தனம், காலை, 6:30 மணிக்கு, சத்ய சாயி சனாதன தர்மகொடி ஏற்றுதல் ஆகிய நிகழ்ச்சிகளும், காலை, 8:30 மணிக்கு சத்குரு பிரார்த்தனை, மகா கணபதி பிரார்த்தனை, ஸ்வஸ்தி புண்ணியாகம், கலச ஸ்தாபனம், 1,008 சகஸ்ர சங்கு பூஜை, அக்னி பிரதிஷ்டை, மகா கணபதி, நவக்கிரக, ருத்ரஹோமம், சகஸ்ர சங்காபி?ஷகம், அர்ச்சனை, மகா மங்களாரத்தி, தீர்த்த பிரசாத வினியோகம், இரவு, 7:00 ஊஞ்சல் சேவை ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. கர்நாடகா மாநிலம், ஆனைக்கல் அருகே உள்ள கித்தகானஹள்ளி பகுதியை சேர்ந்த பிரம்ம நஞ்சுண்ட தீட்சிதர், வைபவ நிகழ்ச்சியை நடத்தி வைத்தார். தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட சத்யசாயி சேவா நிறுவனங்கள் நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !