உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாரியம்மன் கோவில் திருவிழா

மாரியம்மன் கோவில் திருவிழா

தலைவாசல்: தலைவாசல், சிறுவாச்சூர், ஆதிதிராவிடர் காலனியில் உள்ள புத்து மாரியம்மன் கோவில் திருவிழா, கடந்த, 6ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. நேற்று, ஏராளமானோர் பால்குடம் எடுத்து, முக்கிய வீதிகள் வழியாக, ஊர்வலம் சென்று, கோவிலை அடைந்தனர். அப்போது, அக்னி சட்டி எடுத்தும், உருளுதண்டம், அலகு குத்தியும் ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு நடந்த கரகாட்டத்தை, ஏராளமானோர் கண்டுகளித்தனர். மஞ்சள் நீராட்டு விழாவுடன், திருவிழா இன்று நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !