மழை வேண்டி பெண்கள் ஒப்பாரி வைத்து வழிபாடு
ADDED :3010 days ago
போளூர்: திருவண்ணாமலை மாவட்டம், போளூர் பேரூராட்சி பகுதியில், 40ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இந்த பகுதி மக்கள் கடும் வறட்சியினால் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், அப்பகுதியில், 1,000 அடிக்கு மேல் போர்வெல் போட்டும் நீர் கிடைக்கவில்லை. இதனால் அப்பகுதி பெண்கள், பெரிய ஏரியில் உள்ள பெரிய நாச்சியம்மன் கோவிலில், நேற்று பொங்கல் வைத்து பூஜை செய்து, ஒப்பாரி வைத்து, வருண பகவானிடம் மழை வேண்டி பிரார்த்தனை செய்தனர். இதில், அப்பகுதியை சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர்.