உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கம்பராயப் பெருமாள் கோயில் மஞ்சள் நீராட்டம்

கம்பராயப் பெருமாள் கோயில் மஞ்சள் நீராட்டம்

கம்பம்: கம்பம் கம்பராயப் பெருமாள் கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு நேற்று காலை மஞ்சள் நீராட்டம் நடந்தது. இக்கோயில் தேரோட்டம் ஜூலை 11ல், நடக்கிறது. மூன்று நாட்கள் நடைபெறும் இத்தேரோட்டத்திற்கான கொடியேற்றம் ஜூலை 3 ல் நடந்தது. அதனை தொடர்ந்து தினமும் ஒவ்வொரு சமூகத்தினர் சார்பில் மண்டகப்படி நடந்து வருகிறது. பல்வேறு அலங்காரங்களில் சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கடந்த 8 ம் தேதி திருக்கல்யாணம் நடைபெற்றது. கம்பராயப் பெருமாளுக்கும், ஸ்ரீதேவி, பூதேவிக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. திருக்கல்யாணத்தை தொடர்ந்து நேற்று காலை மஞ்சள் நீராட்டம் நடந்தது. அனைத்து வேளாளர் சங்கங்களின் சார்பில் நடைபெற்ற இந்த மஞ்சள் நீராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். வேலப்பர் கோயில் வீதி, காந்திஜி வீதி, பெண்கள் மேல்நிலைப்பள்ளி தெரு உள்ளிட்ட வீதிகள் வழியாக மஞ்சள் நீராட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளில் ரத உற்சவ கமிட்டி தலைவர் எஸ்.டி.டி.இளங்கோவன், ராமலிங்கம்பிள்ளை அறக்கட்டளை மேலாண்மை இயக்குநர் ஆர்.பாஸ்கர், மத்திய சங்க தலைவர் கே.வி.பி.முருகேசன், வேளாளர் சங்க தலைவர்கள் எம்.எஸ்.எஸ்.காந்தவாசன், கோபாலகிருஷ்ணன், மணிகன்டன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். ஜூலை 11 ல் தேரோட்டம் துவங்கி 13 ல் முடிவடைகிறது. இதையொட்டி, கோயில் வளாகம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !