உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கவுமாரியம்மன் கோயிலில் ஆனித்திருவிழா கொடியேற்றம்

கவுமாரியம்மன் கோயிலில் ஆனித்திருவிழா கொடியேற்றம்

பெரியகுளம்: பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் ஆனித்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. அறநிலையத்துறைக்கு உட்பட்ட இக்கோயிலில்  ஜூலை 4ல்  சாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று  கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது. அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்.  ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பத்து நாட்கள் நடக்கும் திருவிழாவில் அம்மன்  பல்வேறு வாகனங்களில் எழுந்தருள்வார்.  முக்கிய நிகழ்வான  ஜூலை 18ல் மாவிளக்கு வழிபாடும்,  19ம்தேதி அக்னி சட்டி எடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !