சிரவண சோமாவாரம்: சிவ பூஜை செய்து பக்தர்கள் வழிபாடு
ADDED :3121 days ago
அலகாபாத்: தமிழகத்தில் ஆடி மாதத்தைப்போன்று, வட மாநிலங்களில் சிரவண மாதம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த மாதத்தில் வரும் ஒவ்வொரு திங்கள் கிழமை சிறப்பானாதாக கருதப்படுகிறது. சிரவண சோமாவாரத்தின் முதல் திங்கட்கிழமையை முன்னிட்டு, நேற்று (ஜூலை 10) அலகாபாத்தில் ஏராளமான பக்தர்கள் சிவனுக்கு தீப ஆராதனைகளை செய்து சிறப்பு வழிபாடு நடத்தினர். இதேபோல் உத்தரப்பிரதேசம், ஜார்க்கண்ட் போன்ற வடமாநிலங்களில் சிரவண மாதத்தையொட்டி, கோயில்களில் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.