விநாயகர் கோயில்களில் சங்கடஹர சதுர்த்தி விழா
ADDED :3338 days ago
திருவாடானை: விநாயகர் கோயில்களில் சங்கடஹர சதுர்த்தி விழா நடந்தது. திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் உள்ள விநாயகர் சன்னதி, பஸ்ஸ்டாண்டில் உள்ள ஆதிரெத்தின கணபதி, பாரதிநகரில் லட்சுமிவிநாயகர், தொண்டி இரட்டைபிள்ளையார் ஆகிய கோயில்களில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. மஞ்சள், பால், பன்னீர், பஞ்சாமிர்தம் போன்ற அபிேஷகங்கள் நடந்தன. விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவிக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.