காளியம்மன், பகவதியம்மன் கோயில் விழா
ADDED :3337 days ago
கன்னிவாடி, கசவனம்பட்டி அருகே வெல்லம்பட்டியில், காளியம்மன், பகவதியம்மன் கோயில் திருவிழா நடந்தது. சாட்டுதலுடன் துவங்கிய விழாவில், அம்மன் கரகம் பாலித்தல், ஊர்வலம், சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. ஏராளமானோர், பொங்கல் வைத்தல், மாவிளக்கு, அக்னிச்சட்டி எடுத்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை செலுத்தினர். மஞ்சள் நீராடலுடன் அம்மன் பூஞ்சோலை புறப்பாடு நடந்தது. விழாவை முன்னிட்டு வாணவேடிக்கை, கலைநிகழ்ச்சிகள் நடந்தது.