உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிருஷ்ணகிரியில் சங்கடஹர சதுர்த்தி

கிருஷ்ணகிரியில் சங்கடஹர சதுர்த்தி

கிருஷ்ணகிரி: சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, கிருஷ்ணகிரி சப்-ஜெயில் ரோட்டில் உள்ள, சித்தி விநாயகர் கோவிலில், நேற்று மாலை, 6:00 மணிக்கு விநாயகருக்கு, 608 பால் குட அபிஷேகம் நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில், சித்திவிநாயகர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பெண்கள் நெய் தீபம் ஏற்றி வழிபட்டனர். 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !