சிதம்பரேஸ்வரர் கும்பாபிஷேகம் கோலாகலம்
ADDED :3085 days ago
பனமரத்துப்பட்டி: சிதம்பரேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. பனமரத்துப்பட்டி, பெரமனூர் பஞ்சாயத்து, நத்தமேட்டில் உள்ள சிதம்பரேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா, கடந்த, 14ல், கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. புதிதாக, திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், 63 நாயன்மார்கள் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. நேற்று அதிகாலை, நான்காம் கால யாக பூஜை, நாடி சந்தானம், மஹா பூர்ணாஹூதி ஆகியவை நடந்தது. காலை, 7:30 மணிக்கு, மந்திரம் ஓத, புனித தீர்த்த கலசங்கள் ஊர்வலம் எடுத்து வரப்பட்டு, கோபுர கலசம் மீது புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடந்தது. கூடியிருந்த பக்தர்கள், சிவ, சிவ என்ற கோஷம் எழுப்பினர். தொடர்ந்து, சிதம்பரேஸ்வரர், சிவகாமி அம்மன், 63 நாயன்மார்கள் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகம் நடந்தது. இதில், ஏராளமான மக்கள், சுவாமியை வழிபட்டனர்.