தலைவாசல் பைரவர் கோவிலில் சிறப்பு பூஜை
ADDED :3085 days ago
தலைவாசல்: தேய்பிறை அஷ்டமி முன்னிட்டு, தலைவாசல், ஆறகளூரில் உள்ள அஷ்ட பைரவர் கோவிலில், நேற்று, பைரவருக்கு சிறப்பு பூஜை மற்றும் யாகம் நடந்தது. மூலவர் காமநாதீஸ்வரர் மற்றும் பெரியநாயகி அம்மனுக்கு, பால், தயிர், நெய், சந்தனம், இளநீர் ஆகியவற்றால், சிறப்பு அபிஷேகம் நடந்தது. பைரவர் மற்றும் மூலவர், சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மாலை, அஷ்டபுஜ கால பைரவருக்கு நடந்த யாகத்தில், பக்தர்கள் பலர் பங்கேற்றனர்.