ஆஞ்சநேயர் கோவிலில் 108 பால்குட அபிஷேகம்
ADDED :5082 days ago
திருத்தணி : திருத்தணி, மேட்டுத் தெருவிலுள்ள வீர ஆஞ்சநேயர் கோவிலில், 108 பால்குட அபிஷேகம் நடந்தது. காலை 8 மணிக்கு, ஜோதிசாமி தெருவிலுள்ள பஜனை கோவில் வளாகத்திலிருந்து, 108 பால்குட ஊர்வலத்தை, நகராட்சித் தலைவர் சவுந்தர்ராஜன் தொடங்கி வைத்தார். பால்குடம் பழைய பஜார் தெரு, மேட்டுத் தெரு வழியாக ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தை அடைந்தது. காலை 10 மணிக்கு, மூலவர் ஆஞ்சநேயருக்கு பால்குட அபிஷேகம், சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. கோவில் சார்பில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 4 மணிக்கு, திரளான பெண்கள் பொங்கல் வைத்து, மூலவருக்கு படைத்து வழிபட்டனர். மாலை 6 மணிக்கு, ஆன்மிக சொற்பொழிவும், இரவு 8 மணிக்கு, சுவாமி திருவீதியுலாவும் நடந்தது.