உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேலாயுத தீர்த்த குளம் சீரமைக்கப்படுமா?

வேலாயுத தீர்த்த குளம் சீரமைக்கப்படுமா?

கண்ணகப்பட்டு வேலாயுத தீர்த்த குளத்தை சீரமைக்க, பகுதிவாசிகளிடையே கோரிக்கை எழுந்துள்ளதுதிருப்போரூர் பேரூராட்சிக்குட்பட்ட, கண்ண கப்பட்டு கிராமம், மடம் தெருவில், சிதம்பர சுவாமிகளால் நிறுவப்பட்டதாக கூறப்படும், வேலாயுத தீர்த்த குளம் உள்ளது. புண்ணிய தீர்த்தமாக கருதப்படும் பழமை வாய்ந்த இக்குளம், தற்போது, சீரழிந்து காணப்படுகிறது.குளத்தின் சுற்றுச்சுவர் உடைந்தும், படிகளில் பாசிகள் நிறைந்தும், குளத்தினுள்ளே மண் மேடுகளும் காணப்படுகின்றன. மேலும், குடியிருப்பு பகுதிகளிலிருந்து வரும் கழிவு நீர், இக்குளத்தில் கலக்கிறது. இதனால், குளத்தின் நீர் கருமை நிறத்தில் காணப்படுகிறது.எனவே, சம்பந்தப்பட்ட, நிர்வாகத்தினர், பழமை வாய்ந்த இக்குளத்தை பார்வையிட்டு, சீரமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என, பக்தர்களும், பகுதி வாசிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !