தாண்டிக்குடி பாலமுருகன் கோயிலில் கார்த்திகை விழா
ADDED :3030 days ago
தாண்டிக்குடி: தாண்டிக்குடி பாலமுருகன் கோயிலில் கார்த்திகை விழா நடந்தது. விழாவில் சுவாமிக்கு அபிஷேக, ஆராதனை மற்றும் விளக்குப் பூஜை, பஜன் நடந்தது. தொடர்ந்து சுவாமி ராஜ அலங்காரத்தில் காட்சியளித்தார். திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். உற்சவமூர்த்தி மலைக்கோயிலை சப்பரத்தில் வலம் வரும் நிகழ்வு நடந்தது. முன்னதாக அன்னதானம் நடந்தது.