மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் மண்டாலாபிஷேகம்
ADDED :3100 days ago
திருப்புவனம்: திருப்புவனம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் கடந்த மாதம் 4ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. இதனையொட்டி நேற்று மண்டலாபிஷேகம் நடைபெற்றது காலை 5:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. காலை ஏழு மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நடந்தன. காலை 9:30 மணிக்கு அம்மனுக்கு பால் அபிஷேகம், சந்தன அபிஷேகம், பன்னீர் அபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. மண்டலாபிஷேக விழாவில் பிள்ளையார்பட்டி தலைமை அர்ச்சகர் பிச்சை குருக்கள் பங்கேற்றார். விழாவில் கோயில் உதவி ஆணையர் இளையராஜா, அறங்காவலர் குழு தலைவர் ஜெய்சங்கர் உள்ளிட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.