உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குமரகோட்டத்தில் ஆடி கிருத்திகை விழா

குமரகோட்டத்தில் ஆடி கிருத்திகை விழா

காஞ்சிபுரம்: ஆடி கிருத்திகையையொட்டி, காஞ்சிபுரம் குமரகோட்டத்தில், முருக பக்தர்கள் அலகு குத்தி, காவடி எடுத்தனர். காஞ்சியில் உள்ள கோவில்களில் குறிப்பிடத்தக்கது, குமரகோட்டம் சுப்ரமணிய சுவாமி கோவில். அம்மையப்பருடன் முருகப்பெருமான் அமர்ந்திருக்கும் திருக்கோலத்தை, சோமாஸ்கந்த மூர்த்தம் என, அழைப்பர்.ஆண்டுதோறும் இங்கு, ஆடி கிருத்திகை விழா கோலாகலமாக கொண்டாடப்படும். நடப்பு ஆண்டு விழா, கோவில் நிர்வாகம் சார்பில், ஆக., 15ல் கொண்டாடப்படுகிறது. இருப்பினும், நேற்றும் ஆடி மாத கிருத்திகை என்ப தால், முருக பக்தர்கள் காவடி எடுத்தனர். பெரியோர் மட்டு மின்றி, சிறியவர்களும் வாயில், அலகு குத்தி, காவடி எடுத்து நேர்த்திக்கடனை செலுத்தினர். பம்பை உடுக்கை கலைஞர்களின் இசை நிகழ்ச்சியும் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !