உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 58 அம்மன் கோவில்களில் ஆடி வெள்ளி திருவிழா

58 அம்மன் கோவில்களில் ஆடி வெள்ளி திருவிழா

வேலூர்: வேலூர் மாவட்டத்தில், 58 அம்மன் கோவில்களில், ஆடி வெள்ளி திருவிழா நடந்தது. ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையையொட்டி, வேலூர் மாவட்டத்தில் உள்ள, 58 அம்மன் கோவில்களில் நேற்று ஆடி வெள்ளி திருவிழா நடந்தது. அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். வேலூர் புது பஸ் ஸ்டாண்ட் அருகே, செல்லியம்மன் கோவிலில் தங்க கவச அலங்காரம், காட்பாடி ரோடு கோவிலில் விஷ்ணு துர்கையம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம், லாங்கு பஜார் கோவிலில் உள்ள வேம்புலியம்மன் வெள்ளி கவச அலங்காரம், டிட்டர் லைன் கோவில் தேவி கரமாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வேலூர் வாணியர்பேட்டையில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், வாழை தண்டு, சந்தனம் கொண்டு காளியம்மன் சிலை செய்து, 100 பெண்கள் தசமஹா வித்யா பூஜை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !