உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்துமாரியம்மன் கோவில் ஆடி திருவிழா கோலாகலம்

முத்துமாரியம்மன் கோவில் ஆடி திருவிழா கோலாகலம்

காஞ்சிபுரம்:பல்லவர்மேடு முத்துமாரியம்மன் கோவில் ஆடி திருவிழாவை முன்னிட்டு, கூழ்வார்த்தல் மற்றும் பக்தர்கள் அலகு குத்தி, தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். காஞ்சிபுரம், பல்லவர்மேடு கிழக்கு பகுதியில், முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், ஆடி திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

அபிஷேகம்: இந்த ஆண்டு விழா நேற்று நடந்தது. காலை, அங்குள்ள கற்பக விநாயகருக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் நடந்தது. பக்தர்கள் அலகு குத்தி, வேனில் தொங்கியபடி, கோவிலுக்கு வந்தனர். கூழ் படைத்து, பொதுமக்களுக்கு வழங்கினர்.

வீதியுலா: இரவு, 11:00 மணிக்கு, முத்துமாரியம்மன் மலர் அலங்காரத்தில் எழுந்தருளி, வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முன்னதாக, செவ்வாய் கிழமை காப்பு கட்டுதல், காயாரோகணீஸ்வரர் குளத்தில் இருந்து ஜலம் எடுத்து, அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !