வலம்புரிவிநாயகர் கோயிலில் மண்டல பூஜை
ADDED :3332 days ago
மானாமதுரை, மானாமதுரை சுந்தரபுரம் கடைவீதியில் உள்ள வலம்புரிவிநாயகர் கோயிலில் மண்டல பூஜை நடந்தது. இதில், யாகசாலைகள் அமைத்து வலம்புரி விநாயகருக்கு சிறப்பு அபிசேகங்களும், ஆராதனைகளும் நடைபெற்றது. சுந்தரபுரம் கடைவீதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது.