கடலுார் கடற்கரையில் ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
ADDED :3039 days ago
கடலுார்: ஆடி அமாவாசையை முன்னிட்டு கடலுார் கடற்கரையில் முன்னோர்கர்களுக்கு ஏராளமானோர் தர்பணம் கொடுத்தனர். முன்னோர்களுக்கு திதியில் தர்ப்பணம் கொடுக்க மறந்தவர்கள், ஆடி அமாவாசையில் நீர் நிலைகளில் தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். அதன்படி நேற்று ஆடி அமாவாசையை முன்னிட்டு கடலுார், தேவனாம்பட்டினம் கடற்கரையில் ஏராளமானோர் கடலில் நீராடி, புரோகிதர்கள் மூலம் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். பலர் அன்னதானம் வழங்கினர்.
விருத்தாசலம்: மணிமுக்தாற்றில் உள்ள ஆலமரத்து விநாயகர் கோவில் அருகில் காலை 6:00 மணி முதல் ஏராளமானோர் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். சிதம்பரம்: நடராஜர் கோவில் வளாகத்தில் உள்ள சிவகங்கை குளக்கரையில் ஏராளமானோர் எள்ளும் தண்ணியும் தெளித்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்தனர்.