உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆடி அமாவாசையில் முன்னோர்க்கு தர்ப்பணம்

ஆடி அமாவாசையில் முன்னோர்க்கு தர்ப்பணம்

சேலம்: சுகவனேஸ்வரர் கோவில் நந்தவனம், அணைமேடு ஆகிய இடங்களில், முன்னோர்க்கு தர்ப்பணம், திதி கொடுத்து, பக்தர்கள் வழிபட்டனர். ஆடி அமாவாசையான நேற்று, சேலத்தை சேர்ந்தவர்கள், மேட்டூர், பவானி கூடுதுறை, பூலாம்பட்டி, கல்வடங்கம் ஆகிய இடங்களுக்கு சென்று, முன்னோர்க்கு தர்ப்பணம், திதி கொடுத்து வழிபட்டனர். அங்கு செல்ல முடியாதோர், சேலம், சுகவனேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள நந்தவனம், அணைமேடு, உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவில் பின்புறம் உள்ள நந்தவனம் ஆகிய இடங்களில், முன்னோர்க்கு தர்ப்பணம் செய்தும், திதி கொடுத்தும் வழிபாடு நடத்தினர். அவர்கள், கோவில் சார்பில் பராமரிக்கப்படும் மாடுகளுக்கு, அகத்திக்கீரையை, அதிக அளவில் வாங்கி கொடுத்தனர்.

* கெங்கவல்லி அருகே, ஒதியத்தூரில், பிராமண சபை சார்பில், பித்ருகளுக்கு தர்ப்பணம் செய்யப்பட்டது. அப்போது, மழை வேண்டி வர்ண ஜெபம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !