உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆடி அமாவாசையை முன்னிட்டு 50 கிடா பலியிட்டு நேர்த்திக்கடன்

ஆடி அமாவாசையை முன்னிட்டு 50 கிடா பலியிட்டு நேர்த்திக்கடன்

பனமரத்துப்பட்டி: ஆடி அமாவாசையை முன்னிட்டு, சேலம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. பனமரத்துப்பட்டி பிரிவு அருகே, கோட்டை புது கருப்புசாமி கோவில் உள்ளது. அங்கு, அருள்வாக்கு கேட்க, அமாவாசை நாளில் வெளியூர் மற்றும் உள்ளுரில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்வர். நேற்று முன்தினம் தொடங்கிய ஆடி திருவிழாவில், சக்தி அழைத்தல், பொங்கல் வைத்தல் நடந்தது. பக்தர்கள் அலகு குத்தியும், மொட்டை அடித்தும், அக்னி குண்டம் இறங்கி வழிபட்டனர். நேற்று, ஆடி அமாவாசையை முன்னிட்டு, பக்தர்கள் ஐம்பது ஆட்டு கிடாவை பலியிட்டு, நேர்த்திக்கடன் செலுத்தினர். பூசாரி, அரிவாள் மீது நின்று, பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார். மக்களுக்கு மட்டன் பிரியாணி, வறுவல், சாப்பாடு வழங்கப்பட்டது. இதில், கோவை, பெங்களூர், சேலம், தர்மபுரி பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

* ஆட்டையாம்பட்டி காளியம்மன் கோவிலில், மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபி?ஷகம் செய்யப்பட்டது. பின், சிவன், சக்தி இணைந்த அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காளிப்பட்டி சென்றாய பெருமாள் கோவிலில் உள்ள, வீரபக்த ஆஞ்சநேயருக்கு, வெள்ளி கவசம் சார்த்தப்பட்டது.

* தாரமங்கலம் மங்களலிங்கம் அறக்கட்டளை சார்பில், உலக அமைதிக்காக நடக்கும், 210வது பெருவேள்வி, கைலாசநாதர் கோவிலில் நேற்று நடந்தது. மூலிகை, காய்கறி, திரவியம் என ஒவ்வொன்றிலும், 108 வகை பொருட்கள் யாக குண்டத்தில் சேர்க்கப்பட்டன. மேலும், இடைப்பாடி, தேவகிரி அம்மனுக்கு, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வளையல் மூலம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

* தம்மம்பட்டி, மாரியம்மன் கோவிலில், 108 பால்குடம் ஊர்வலம் தொடங்கி, முக்கிய வீதிகள் வழியாக, கோவிலை அடைந்தது. ஊர்வலம் எடுத்து வந்த பாலை, அம்மனுக்கு ஊற்றி அபி?ஷகம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !