உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தணிகாசலம்மன் கோவிலில் 26ல் வளைகாப்பு விழா

தணிகாசலம்மன் கோவிலில் 26ல் வளைகாப்பு விழா

திருத்தணி: தணிகாசலம்மன் கோவிலில், வரும், 26ம் தேதி, ஆடிப்பூரம் மற்றும் வளைகாப்பு விழா நடக்கிறது.திருத்தணி, அக்கைய்யநாயுடு சாலையில், தணிகாசலம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆடி மாதம் முழுவதும் தினமும் காலையில் மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்து வருகிறது. இந்நிலையில், வரும் 26ம் தேதி, ஆடிப்பூரத்தையொட்டி, வளைகாப்பு விழா நடக்கிறது. விழாவை ஒட்டி, காலை, 9:00 மணிக்கு மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடக்கிறது. காலை,10:00 மணிக்கு, அம்மனுக்கு வளைகாப்பு மற்றும் மகா தீபாராதனையும் நடக்கிறது. மாலையில் உற்சவர் அம்மன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !