உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செங்கழுநீர் அம்மனுக்கு கூழ் வார்த்தல் திருவிழா

செங்கழுநீர் அம்மனுக்கு கூழ் வார்த்தல் திருவிழா

திருப்போரூர்: திருப்போரூரில், செங்கழுநீர் அம்மன் கோவிலில் கூழ் வார்த்தல் திருவிழா, நேற்று கோலாகலமாக நடந்தது.திருப்போரூரில் பழமை வாய்ந்த செங்கழுநீர் அம்மன் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் ஆடி மாதத்தில், கூழ் வார்த்தல் விழா நடப்பது வழக்கம். அது போல, இந்தாண்டிற்கான விழா, நேற்று முன்தினம் அம்மனுக்கு காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து, நேற்று காலை, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், பின், திருக்குடம் வீதியுலாவும் நடந்தது.பகல், 1:00 மணிக்கு கூழ் வார்த்தல் நடைபெற்றது. அதை தொடர்ந்து, இரவு, 8:00 மணிக்கு சுவாமி புரப்பாடும் நடைபெற்றது. விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !