உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செங்கேணியம்மன் கோவில் செடல் உற்சவம்

செங்கேணியம்மன் கோவில் செடல் உற்சவம்

திருக்கனுார்: திருக்கனுார் அடுத்த கே.ஆர்.பாளையம் கிராமத்தில் உள்ள செங்கேணியம்மன் கோவில் செடல் உற்சவம் கடந்த 18ம் தேதி துவங்கியது. கடந்த 19ம் தேதி காலை 8:00 மணிக்கு அம்மனுக்கு பால் அபிஷேகமும், மாலை 3:00 மணிக்கு ஐயனாரப்பனுக்கு ஊரணி பொங்கல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் பகல் 12:00 மணிக்கு அம்மனுக்கு சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. மாலை 3:00 மணிக்கு செடல் உற்சவம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தேர் மற்றும் வாகனங்கள் இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !