ஆர்.எஸ்.மங்கலம் அரசாள வந்த அம்மன் கோயில் பால்குட விழா
ADDED :3039 days ago
ஆர்.எஸ்.மங்கலம்:ஆர்.எஸ்.மங்கலம் அரசாள வந்த அம்மன் கோயில் 41 ம் ஆண்டு பால்குட விழா மற்றும் பூச்சொரிதல் விழா ஜூலை 17 ல் காப்புக்கட்டுதலுடன் துவங்கியது.
அம்மனுக்கு தினமும் அபிஷேக ஆராதனை நடைபெற்றது. முக்கிய நாளான நேற்று பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள திரவுபதி அம்மன் கோயிலில் இருந்து பால்குடம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக பக்தர்கள் ஊர்வலமாக சென்று அரசாளவந்த அம்மன் கோயிலை அடைந்து அம்மனுக்கு பால அபிஷேகம் செய்தனர். மாலையில் பூச்சொரிதல் விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் பூக்களுடன் ஊர்வலமாக சென்று அம்மனுக்கு மலர் அபிேஷகம் செய்தனர். விழாவை முன்னிட்டு அன்னதானம் நடைபெற்றது. விழாவில் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.