ராமேஸ்வரம் கோயிலில் ஆடித் தேரோட்டம்
ADDED :3351 days ago
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆடித் திருக்கல்யாண விழாவை யொட்டி தேரோட்டம் நடந்தது.ராமநாதசுவாமி கோயிலில் ஜூலை 17ல் கொடி ஏற்றத்துடன் ஆடித் திருக்கல்யாண விழா துவங்கியது. ஆடித் தேரோட்டத்தை யொட்டி நேற்று, திருக்கோயிலில் இருந்து பர்வதவர்த்தினி அம்மன் புறப்பாடாகி திருத்தேரில் எழுந்தருளினார். பின் அம்மனுக்கு கோயில் தீபாராதனை நடந்தது. பின், பக்தர்கள் சிவ சிவ என கோஷமிட்டபடி தேர் வடம்பிடித்து இழுத்தனர். ரதவீதியில் வலம் வந்த தேரை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.தக்கார் குமரன் சேதுபதி, கோயில் இணை ஆணையர் மங்கையர்கரசி, உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன், உதவி ஆணையர் பாலகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.