உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விநாயகர் சதுர்த்திக்கு 1,001 சிலைகள்

விநாயகர் சதுர்த்திக்கு 1,001 சிலைகள்

ஊட்டி : இந்து முன்னணி மாவட்ட செயற்குழு கூட்டம் ஊட்டி ராகவேந்திரா கோவில் மண்டபத்தில் நடந்தது. மாநில செயலாளர் கிேஷார் தலைமை வகித்தார். கூட்டத்தில், வரும் ஆக.,28 ம் தேதி நடக்கும் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, மாவட்டம் முழுவதும் 1001 இடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்வது; விநாயகர் விசர்ஜன விழாவில், திரளாக பங்கேற்பது; மாவட்டத்தில் உள்ள கிளை நிர்வாகிகளை சந்திப்பது என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மாவட்ட தலைவர் மஞ்சுநாத், மாவட்ட செயலாளர்கள் கார்த்திக், மணிகண்டன், ஆனந்த், செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன், மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். ராஜா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !