உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொன்னியம்மன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்

பொன்னியம்மன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்

படுநெல்லி: பொன்னியம்மன் கோவில் கும்பாபிஷேகம், நாளை கோலாகலமாக நடைபெற உள்ளது. நேற்று, கணபதி ஹோமத்துடன், பூஜைகள் துவங்கின. வாலாஜாபாத் ஒன்றியம், படுநெல்லி கிராமத்தில் பொன்னியம்மன் கோவில், புதிதாக கட்டப்பட்டுள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகம் நாளை காலை, 7:30 - 9:00 மணிக்குள் நடைபெற உள்ளது.இதை முன்னிட்டு, நேற்று காலை, 9:30 மணிக்கு, காஞ்சிபுரம் கிளை திருவாடுதுறை ஆதினம் சுந்தரமூர்த்தி தம்பிரான் சுவாமிகள், கணபதி ஹோமத்துடன் பூஜைகளை துவக்கினார். மாலையில், விசேஷ திரவிய ஹோமம் நடந்தது. இன்று காலை, 7:30 மணிக்கு இரண்டாம் கால யாக சாலை பூஜை மற்றும் மாலை, 5:00 மணிக்கு மூன்றாம் கால யாகசாலை பூஜை நடைபெற உள்ளன. ஸாந்தா சுவாமி முன்னிலையில், கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை, படுநெல்லி கிராமவாசிகள் மற்றும் விழாக்குழுவினர் செய்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !