உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவன்மலையில் ஆடி சஷ்டி பூஜை

சிவன்மலையில் ஆடி சஷ்டி பூஜை

திருப்பூர் : காங்கயம், சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவிலில், ஆடி சஷ்டியை முன்னிட்டு, நேற்று சிறப்பு பூஜை நடந்தது. காங்கயம் சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவி லில், ஆடி சஷ்டியை முன்னிட்டு, காலை, 6:00 மணிக்கு, சிறப்பு அபிஷேக பூஜை நடைபெற்றது. மதியம், 12:00க்கு, உச்சி கால பூஜையும், அதை தொடர்ந்து, ஆடி சஷ்டி சிறப்பு பூஜை நடந்தது. வள்ளி, தெய்வானையுடன் சுப்ரமணியர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ரத உற்சவம் நடந்தது. அடிவாரத்தில் உள்ள, சஷ்டி அன்னதான மண்டபத்தில் அன்னதானம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !