உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் ஆடிப்பூர விழா

ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் ஆடிப்பூர விழா

திருவாடானை, திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் ஆடிப்பூரத்திருவிழாவை முன்னிட்டு சிநேகவல்லிதாயார் தபசு கோலத்தில் காட்சியளித்தார்.
பின்பு அம்பாள் கதிர் குளித்தலும், உல்லாச சயன அலங்காரத்தில் வீதி உலா நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
கமுதி: கமுதி அருகே கருங்குளம் சக்திமாரியம்மன் கோயில் ஆடிப்பொங்கல் விழா கொடியேற்றம், காப்பு கட்டுதலுடன் துவங்கியது.

கமுதி கருங்குளம் சக்தி மாரியம்மன் கோயில் 16 ஆம் ஆண்டு ஆடிப்பொங்கல் விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது, ஆண்டுதோறும் நடக்கும் பொங்கல் விழாவை முன்னிட்டு, ஆக, 3 ல், திருவிளக்கு பூஜை, பொங்கல் வைத்தல், 4 ல், அக்னி சட்டி எடுத்தல், ஆயிரம் கண் பானை, பால்குடம் எடுத்தல், நேர்த்தி கடன் செலுத்துதல், அம்மனுக்கு பாலாபிேஷகம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !