உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆடி 2வது வெள்ளி; கோவில்களில் வழிபாடு ஜோர்

ஆடி 2வது வெள்ளி; கோவில்களில் வழிபாடு ஜோர்

ஈரோடு: ஆடி இரண்டாம் வெள்ளியை ஒட்டி, அம்மன் கோவில்களில், நேற்று சிறப்பு வழிபாடு களை கட்டியது. ஈரோட்டில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும், சிறப்பு அபி?ஷகம், அலங்காரம் மகாதீபாராதனை நடந்தது. பெரிய மாரியம்மன், மஞ்சள் காப்பு அலங்காரம், சூளை அங்காள பரமேஸ்வரியம்மன், தாலி அலங்காரம், ஈ.பி.பி., மாரியம்மன் சந்தனக்காப்பு அலங்காரத்திலும் அருள் பாலித்தனர். இதேபோல் சுக்கிரமணிய வலசு மாரியம்மன், சூரம்பட்டி வலசு மாரியம்மன், வீரப்பன்சத்திரம் மாரியம்மன், நடுமாரியம்மன் உள்ளிட்ட நகரத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு, விளக்கு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். பெரிய மாரியம்மன் கோவிலில், எம்.எல்.ஏ.,க்கள் ராமலிங்கம், தென்னரசு உள்ளிட்ட அ.தி.மு.க., நிர்வாகிகள் தரிசனம் செய்தனர். புன்செய்புளியம்பட்டி, அந்தியூர், பவானி, பெருந்துறை, சத்தியமங்கலம், கோபி பகுதிகளில் அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !