தேவி கருமாரியம்மன் கோயிலில் பஞ்சமி பூஜை
ADDED :2994 days ago
சின்னாளபட்டி, நாக பஞ்சமியை முன்னிட்டு சின்னாளபட்டி-அம்பாத்துரை ரோடு தேவி கருமாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. பாலாபிஷேகத்துடன், அம்மனுக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பின்னர் நடைபெற்ற மகா தீபாராதனையில், சுற்றுப்புற பகுதிகளைச்சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயிலில் நாக பஞ்சமி சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.