சித்தி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் விமரிசை
ADDED :2995 days ago
திருக்கழுக்குன்றம்:ஈச்சங்கரணை சித்தி விநாயகர் மற்றும் கெங்கையம்மன் கோவிலின் கும்பாபிஷேக விழா, நேற்று கோலாகலமாக நடந்தது. திருக்கழுக்குன்றம் அடுத்த ஈச்சங்கரணை கிராமம், இந்திரா நகரில் கெங்கையம்மன் கோவில் உள்ளது. கும்பாபிஷேகம் நடந்து பல ஆண்டுகள் கடந்த நிலையில், இந்த கோவிலில் திருப்பணிகள்நடந்தன.அருகில், சித்தி விநாயகர் கோவிலும் புதிதாக எழுப்பப்பட்டது. இந்த இரண்டு கோவிலின்அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகத்துக்கான கணபதி பூஜை, கோ பூஜை, லட்சுமி பூஜை மகாதீபாராதனை நடந்தது. இதையடுத்து, நேற்று காலை, கலச குடங்கள் எடுத்து செல்லப்பட்டு இரண்டு விமானங்களிலும், 9:30 மணிக்கு, புனித நீர் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது.