உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சிபுரம் தண்டு மாரியம்மன் ஆடிப்பூரம் நிறைவு

காஞ்சிபுரம் தண்டு மாரியம்மன் ஆடிப்பூரம் நிறைவு

காஞ்சிபுரம்: ராஜாஜி மார்க்கெட், தண்டு மாரியம்மன் கோவிலின் ஆடிப்பூர விழா நிறைவடைந்தது.காஞ்சிபுரம், ராஜாஜி மார்க்கெட்டில் உள்ள, தண்டு மாரியம்மன் கோவிலில், ஆண்டுதோறும் ஆடிப்பூர விழா, மூன்று நாட்கள் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், நடப்பாண்டு விழா, 26ல் துவங்கியது. அன்று, காலை, 6:30 மணிக்கு, ஜலம் திரட்டுதலும், 9:00 மணிக்கு, கரகம் புறப்பாடும் நடந்தது.கடந்த, 27ல், சிம்மவாகனத்தில் எழுந்தருளிய அம்மன், ரயில்வே சாலை, காந்தி சாலை, நான்கு ராஜ வீதிகள்வழியாக வீதியுலா சென்றார். நிறைவு நாளான நேற்று மாலை, சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஆடிப்பூர விழா குழுவினரும், காஞ்சிபுரம் ராஜாஜி மார்க்கெட் அனைத்துவியாபாரிகள் சங்கத்தினரும் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !