திருமலை அகரத்தில் அரவான் களபலி
ADDED :2995 days ago
பெண்ணாடம்: பெண்ணாடம், திருமலை அகரம் திரவுபதி அம்மன் கோவிலில் நடந்த அரவான் களப்பலி நிகழ்ச்சியில் ஏராளமானோர் தரிசனம் செய்தனர். கடந்த 10ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து, தினமும் இரவு அம்மன் வீதியுலா நிகழ்ச்சி நடந்தது. 26ம் தேதியன்று திருக்கல்யாண உற்சவம் நடந்தது. அதையடுத்து, 28ம் தேதி காலை அரவான் களபலி நடந்தது. இதில் ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர். மாலை 5:00 மணியளவில் தீ மிதி உற்சவம் நடந்தது. 29ம் தேதி மஞ்சள் நீர் உற்சவம் நடக்கிறது.