வரதராஜ பெருமாளுக்கு ஆடிப்பூர திருக்கல்யாணம்
ADDED :2996 days ago
விழுப்புரம்: அரசமங்கலம் வரதராஜ பெருமாள் கோவிலில் ஆடிப்பூர உற்சவ பெருவிழா நடந்தது. விழாவை யொட்டி, நேற்று முன்தினம் காலை 8:00 மணிக்கு வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. தொடர்ந்து 9.00 மணிக்கு தீபாராதனை, மாலை 6:00 மணிக்கு ஆடிப்பூர நட்சத்திரத்தை யொட்டி, வரதராஜ பெருமாளுக்கு திருக்கல்யாணம் நடந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் அர்ச்சகர் வெங்கடேஷ்பாபு பட்டாச்சாரியார் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.