உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தாலிக்கயிறு மாற்ற நல்ல நாள்

தாலிக்கயிறு மாற்ற நல்ல நாள்

தட்சிணாயன புண்ணிய காலமான ஆடியில் விவசாயிகள் உழவுப்பணி துவங்குவர். ஆடிப் பட்டம் தேடி விதை என்றே பழமொழி உண்டு. நாடு செழிக்க நதிகளைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஆடிப்பெருக்கு நன்னாளை முன்னோர்கள் தேர்ந்தெடுத்தனர். இந்நாளில் நதிகளில் நீராடி காவிரி அன்னையை வழிபட்டு மஞ்சள், குங்குமம், பூக்களை ஆற்றில் விட வேண்டும். புதிதாக மணமான பெண்கள்,  திருமணமான  மூன்றாம் மாதத்தில் புதுமஞ்சள் கயிறு மாற்றுவர். இதற்கு தாலி பெருக்குதல் என்று பெயர். வைகாசியில் திருமணம் செய்தவர்கள்  மூன்றாம் மாதமான ஆடியில், இந்த சடங்கை நடத்துவது விசேஷம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !