உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செல்வ வளம் தரும் பூஜை

செல்வ வளம் தரும் பூஜை

ஆடிப்பெருக்கு பூஜையை வீட்டில் எளிய முறையில் செய்யலாம். நிறைகுடத்தில் இருந்து ஒரு செம்பு தண்ணீர் எடுத்து, அதில் அரைத்த மஞ்சளை சேர்க்க வேண்டும்.  இந்த தீர்த்தத்தை விளக்கின் முன் வைத்து, சர்க்கரை பொங்கல் படைக்க வேண்டும்.  உதிரிப்பூக்கள் தூவி அம்மன் அல்லது லட்சுமிக்குரிய போற்றி அர்ச்சனை சொல்ல வேண்டும். தீபாராதனை செய்து கங்கை, யமுனை,  நர்மதை, காவிரி, வைகை உள்ளிட்ட புண்ணிய நதிகளை மனதார நினைத்து வணங்க வேண்டும். தீர்த்தத்தை மரம், செடிகள் உள்ள இடத்தில் ஊற்ற வேண்டும். இந்த பூஜையால் வீட்டில் செல்வ வளம் பெருகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !