உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆண்டாள் கோயிலுக்கு வந்தது ஜெயமால்யதா!

ஆண்டாள் கோயிலுக்கு வந்தது ஜெயமால்யதா!

ஸ்ரீவில்லிபுத்தூர்:ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு, பாரததேச வைஷ்ணவர்கள் சார்பில், திருக்கோஷ்டியூர் சவும்ய நாராயண எம்பெருமானார் அறக்கட்டளை மூலம், பெண் யானை வழங்கப்பட்டுள்ளது. அசாமில் இருந்து கொண்டு வரப்பட்ட இந்த யானைக்கு, சென்னை ஸ்ரீபெரும்புதூரில்பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து நேற்று அதிகாலை ஆண்டாள் கோயிலுக்கு வந்த யானைக்கு, விஸ்வரூப தரிசனம் நடந்தது. கஜபூஜை நடத்தி, முறைப்படி கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதன் விழாவில் தக்கார் ரவிசந்திரன், நகராட்சி தலைவர் செந்தில் குமாரி, திருக்கோஷ்டியூர் மாதவன் சுவாமிகள், ஸ்தானிகர் ரமேஷ் உள்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். எட்டு வயதாகும் இந்த யானைக்கு "ஜெயமால்யதா என பெயரிடப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !