உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முருக்கேரியில் தேர் திருவிழா

முருக்கேரியில் தேர் திருவிழா

மரக்காணம்: மரக்காணம் அடுத்த முருக்கேரியில் கோவில் திருவிழா நடந்தது. முருக்கேரியில் உள்ள வேங்கடத்தம்மன், நாகாத்தம்மன் கோவில் திருவிழா, கந்த 23ம் தேதி துவங்கியது. தொடர்ந்து 30ம் தேதி காலை நாகாத்தம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து பூங்கரகம் வீதியுலாவும், கூழ்வார்த்தலும் நடந்தது. நேற்று காலை 8:00 மணிக்கு வேங்கடத்தம்மனுக்கு அபிஷேக ஆராதனையும், 9:00 மணிக்கு திருத்தேர் இழுத்தலும் நடந்தது. பக்தர்கள் வேல், அலகு, செடல் குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. பின், பெண்கள் ஊரணி பொங்கல் வைத்து வழிபட்டனர். இரவு, பூ அலங்காரத்தில் அம்மன் வீதியுலா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !