செல்லியம்மன் வீதியுலா: மதுராந்தகத்தில் விமரிசை
ADDED :3310 days ago
மதுராந்தகம்: மதுராந்தகம் செல்லியம்மன் கோவிலில், ஆடி உற்சவத்தை முன்னிட்டு, அம்மன் வீதியுலா நேற்று நடை பெற்றது. மதுராந்தகத்தில் எழுந்தருளியுள்ள சேற்றுக்கால் பிடாரி செல்லியம்மன் கோவிலில், ஆடி உற்சவம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம், ஊரணிப் பொங்கல் வைத்து, ஏராளமான பக்தர்கள், அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து, நேற்று காலை, அம்மன் வீதியுலா சிறப்பாக நடைபெற்றது. நாளை காலை, திருத்தேர் உற்சவம் மற்றும் மஞ்சள் நீராட்டு விழா நடைபெற உள்ளது.