தாமிரபரணியில் ஆடிப்பெருக்கு:பெண்கள் படையலிட்டு வழிபாடு
திருநெல்வேலி:ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு நெல்லை தாமிரபரணி ஆற்றில் பெண்கள், படையலிட்டுசிறப்பு வழிபாடு மேற்கொண்டனர். ஆடி மாதம் 18ம் தேதி ஆடிப்பெருக்கு அம்மனுக்கு உகந்த மாதமாக ஆடி மாதமாக போற்றப்படுகிறது. ஆடி மாதம் அன்று பெண்கள் நதிக்கரையில் அம்மனுக்கு படையிட்டு வணங்குகின்றனர்.காவிரியில் நடப்பதைப்போலவே நெல்லையிலும் தீராநதி தாமிரபரணிக்கரையில் ஆடிப்பெருக்கு நெல்லை குறுக்குத்துறையில் தாமிரபரணிக்கரையில் அமைந்துள்ள சுப்பிரமணியசுவாமிகோயில் படித்துறையில் சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டனர். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நடக்க வேண்டியும், திருமணமான பெண்களுக்கு தாலிபாக்கியம் நிலைக்கவும், விவசாயிகளுக்கு மகசூல் பெருகி வாழ்வு செழிக்கவும், குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கவும் ஆடிப்பெருக்கு அன்று வழிபடுகிறார்கள். பல வகையான பொருட்களை வைத்தும் படைத்தனர். பெண்கள் தாலிச்சரடை மாற்றிக் கொண்டனர். ஆடிப்பெருக்கையொட்டி தாமிரபரணி ஆற்றுப்பகுதியில் பல்வேறு இடங்களிலும் இந்த வழிபாடு நடந்தது.