சாயல்குடி மாரியூர் பவள நிற வள்ளியம்மன் கோயிலில் சுமங்கலி பூஜை
ADDED :2994 days ago
சாயல்குடி அருகே மாரியூரில் பவளநிற வள்ளியம்மன் சமேத பூவேந்தியநாதர் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆடி சிறப்பு பூஜையாக 1008 பெண்கள் பங்கேற்ற சுமங்கலி பூஜை நடந்தது. மூலவருக்கு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு, சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
ராமநாதபுரம் விவேகானந்த கேந்திர பொறுப்பாளர் நாகஜோதி பூஜைகளை நடத்தினார். மஞ்சள் கயிறு, துணி அடங்கிய தாம்பூல பைகள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. மாலையில் உற்சவ மூர்த்தி ரிஷப வாகனத்தில் பிரகார வீதியுலா வந்தார். காலை முதல் பிற்பகல் வரை அன்னதானம், குளிர்பானங்கள் வழங்கப்பட்டது.