உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமநாதபுரம், அம்மன் கோயில்களில் பக்தர்கள் தரிசனம்

ராமநாதபுரம், அம்மன் கோயில்களில் பக்தர்கள் தரிசனம்

ராமநாதபுரம் பகுதியில் ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்மன் கோயில்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். திருவிளக்கு பூஜையும் நடந்தது. ஆடி வெள்ளியை முன்னிட்டு ராமநாதபுரம் அம்மன் கோயிலில் காலை  சிறப்பு அலங்காரம், பால் அபிஷேகம் நடந்தது. பின் அம்மனுக்கு ஊஞ்சல் சேவை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் கூழ் வழங்கப்பட்டது.

வெளிப்பட்டினம் திரவுபதி அம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. மாலை 5:00 மணிக்கு திருவிளக்கு பூஜை நடந்தது. பின் இரவு 8:00 மணிக்கு துரியோதனன் களப்பலி நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். குயவன்குடி சடையன்வலசையில் வில்வ நாயகி அம்மன், சமேத வில்வ ஈஸ்வரன் கோயிலில் இரவு 7:00அம்மனுக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது.

மாலை 6:00 மணிக்கு திருவிளக்கு பூஜை நடந்தது. இரவு 8:00 மணிக்கு மகேஸ்வர பூஜையும், அன்னதானமும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !