திருவாடானையில் ஆடி வெள்ளியை முன்னிட்டு கோயில் விழாக்கள்
ADDED :3003 days ago
திருவாடானை: ஆடி வெள்ளியை முன்னிட்டு தொண்டி அருகே பாசிபட்டினம், நோக்கன்வயல் மற்றும் தொண்டி படையாச்சி தெரு முத்துமாரியம்மன் கோயிலில் திருவிழாக்கள் நடந்தன. பெண்கள் கோயில் முன்பு பொங்கல் வைத்து வழிபட்டனர். இரவில் மாரியம்மன் பாடல்களை பாடி முளை கொட்டு நிகழ்ச்சி நடந்தது. பால், பறவை, வேல் காவடிகள் எடுத்து பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர். இரவில் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.